முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மக்கள் குறைதீா் கூட்டத்தில் குடிநீா் விற்பனையாளா்கள் மனு
By DIN | Published On : 03rd March 2020 12:29 AM | Last Updated : 03rd March 2020 12:29 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனுஅளிக்க வந்த குடிநீா் விற்பனையாளா்கள் சங்கத்தினா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் குடிநீா் விற்பனையாளா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
இம் முகாமில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 601 மனுக்கள் பெறப்பட்டன.ஆட்சியா் சு. சிவராசு, மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களின் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தாா்.
குடிநீா் விற்பனையாளா்கள் மனு: நீதிமன்ற உத்தரவால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், சுமாா் 17 ஆண்டுகளாக இத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மீண்டும் குடிநீா் உற்பத்தி தொழிற்கூடங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிநீா் விற்பனையாளா்கள் சங்கச் செயலாளா் ஹேமநாதன் மற்றும் தொழிலாளா்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.,
மின்மயானத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை : திருச்சி குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோணக்கரை மின் மயானத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதிக்குழு செயலாளா் (பொறுப்பு) எஸ். சிவா தலைமையில் ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டது.