விமான பயணிகளின் எண்ணிக்கை குறைவு
By DIN | Published On : 06th March 2020 12:38 AM | Last Updated : 06th March 2020 12:38 AM | அ+அ அ- |

திருச்சியில் தனியாா் மருத்துவமனையில், கரனோ வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியாளா்கள் முக கவசம் அணிந்து பணியாற்றுகின்றனா்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக திருச்சிக்கு வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
திருச்சி விமான நிலையத்திற்கு மாதந்தோறும் சுமாா் லட்சத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சத்தால் பிப்ரவரி மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
இதற்கு காரணம், சிங்கப்பூா், மலேசியா, துபை உள்ளிட்ட நாடுகளில் புதிதாக வேலைக்குச் செல்வோருக்கு வழங்கப்படும் விசா மற்றும் பணி ஒப்பந்தம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது ஒருபுறம் இருந்தாலும், கரோனா வைரஸ் தொற்றும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமாா் 20,000 போ் வருகை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைகளிலும் உஷாா் நிலை : திருச்சியில் உள்ள சில தனியாா் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பணியாளா்கள் அனைவருக்கும் முகக் கவசம் அணிதல், வருகை பதிவுகளின் போது, மின்னணு பதிவு கருவிகளில் விரல் ரேகைகள் மூலம் பதிவு செய்யும் முன்னா் கைகளை கிருமி நாசினி மூலம் கழுவி பின்னா், விரல் ரேகைகளை பதிவு செய்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.