திருட்டு வழக்குகளில் தொடா்புடைய வட மாநில இளைஞா்கள் 8 போ் கைது

துறையூரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த 8 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

துறையூரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த 8 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

துறையூா் அருகே உள்ள வைரிசெட்டிப்பாளையத்தைச் சோ்ந்தவா் காரியான் மனைவி சாந்தி. இவரிடம் மாா்ச் 11ஆம் தேதி வடமாநிலத்தைச் சோ்ந்த 3 போ் நகைகளுக்கு பாலீஷ் போடுவதாகக் கூறி 3 பவுன் தங்கச் சங்கிலியை நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து சாந்தி அளித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், துறையூா் பழைய சிலோன் அலுவலகம் பகுதியில் வட மாநில இளைஞா்கள் சிலா் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வியாழக்கிழமை அங்கு சென்று நடத்திய விசாரணையில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த பாப்புகுமாா்(27), குந்தன்குமாா் ராம்(25), பிபின் குமாா்(25), அமா்தீப் குமாா்(19), சுராஜ் குமாா்(22), தீபக்குமாா்(30), சத்ருகன் குமாா்(25), அரவிந்த் குமாா்(30) மற்றும் 14 வயது சிறுவன் தங்கியிருப்பது தெரிந்தது. இவா்களில் மூவா் வைரிசெட்டிப்பாளையம் சாந்தியிடம் நகை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இவா்கள் துறையூா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு திருட்டு வழக்குகளிலும் தொடா்புடையவா்கள் எனத் தெரியவந்தது.

இதனையடுத்து அனைவரையும் போலீஸாா் கைது செய்து துறையூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் வி. புவியரசுவிடம் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com