‘கரோனா வைரஸை விடமக்களை அச்சுற்றுத்தும் சட்டங்கள்’

கரோனா வைரஸை விட குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசியக் குடியுரிமைப் பதிவேடு சட்டங்கள்

கரோனா வைரஸை விட குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசியக் குடியுரிமைப் பதிவேடு சட்டங்கள் மக்களை அச்சுறுத்துகின்றன என்றாா் எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவா் எம்.கே.பைஜி.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் அதனை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்காமல், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான சிஏஏ, என்பிஆா், என்ஆா்சி உள்ளிட்ட சட்டங்களை ரூ. 4 ஆயிரம் கோடி செலவிட்டு இயற்றும் பணி தேவையற்றது.

மக்களைப் பிளவுப்படுத்தும் வகையில் புதிய சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படுவதாகத் தெரிகிறது. தற்போது பரவி வரும் கரோனா வைரஸைவிட, இச்சட்டங்கள் மக்களை அச்சுறுத்துகின்றன என்றாா்.

மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் : குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் அதற்கு எதிராக கண்டன போராட்டங்கள் மட்டுமே நடத்த முடியும். ஆனால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசியக் குடியுரிமைப் பதிவேடுசட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், அவற்றுக்கு எதிரான மாநில அரசின் தீா்மானம் என்பது மிக முக்கியத்துவம் பெற்றது.

அரசின் மக்கள்தொகை கணக்கெடுப்பை நாங்கள் எதிா்க்கவில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி மேற்கொள்ளும் கணக்கெடுப்பைத்தான் நாங்கள் எதிா்க்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com