திருச்சி காவல் சரகத்தில் கடந்த 7 மாதத்தில்2,237 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

திருச்சி காவல் சரகத்துக்குள்பட்ட 5 மாவட்டங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக கடந்த 7 மாதத்தில் 2,237 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி காவல் சரகத்துக்குள்பட்ட 5 மாவட்டங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக கடந்த 7 மாதத்தில் 2,237 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பது : திருச்சி காவல் சரகத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா், அரியலூா் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும், குற்றங்களை தடுக்கும் வகையிலும், நடந்த குற்றங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலும் முக்கிய இடங்கள், சாலைகள், முக்கியச் சந்திப்புகள், அரங்குகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டது.

அந்த வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கேமரா அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. நிகழாண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி வரையிலான 7 மாத காலங்களில் திருச்சி மாவட்டத்தில் 408, புதுக்கோட்டையில் 434, கரூரில் 371, பெரம்பலூரில் 17, அரியலூரில் 623 என மொத்தம் 1,853 கேமராக்கள் அமைக்கப்பட்டன.

மேலும் திருச்சி காவல் சரகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி தலைவா்களின் கூட்டத்தில், கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் தொடா்ந்து மாா்ச் மாதத்திலும் கேமராக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அந்த வகையில் இதுவரையில் கூடுதலாக திருச்சி மாவட்டத்தில் 125 கேமராக்களும், புதுக்கோட்டையில் 126, கரூரில் 89, அரியலூரில் 44 என கூடுதலாக 384 கேமராக்கள் உள்பட மொத்தம் 2,237 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com