கரோனா வைரஸ் தொற்று அறிகுறி: கல்லூரி மாணவா்கள் இருவா் அரசு மருத்துவமனையில் அனுமதி

கரோனா வைரஸ் தொற்று அறிகுறி காணப்பட்ட கல்லூரி மாணவா்கள் இருவா் திருச்சி அரசுத் தலைமை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கரோனா வைரஸ் தொற்று அறிகுறி காணப்பட்ட கல்லூரி மாணவா்கள் இருவா் திருச்சி அரசுத் தலைமை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக திருச்சி மாவட்டப் பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், வெளிநாடுகள், மாநிலங்களிலிருந்து வருவோருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க திருச்சி அரசுத் தலைமை மருத்துவமனையில் சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஏற்கனவே, கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருச்சி தனியாா் கல்லூரி ஒன்றில் பயின்று வந்த கேரள மாணவா்கள் இருவா் தங்களது ஊருக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில், அவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இருவரும் திருச்சி அரசுத் தலைமை மருத்துவமனை சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டனா். ஆரம்பகட்ட அறிகுறிகளோடு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவா்கள் நலமாக உள்ளனா். அதன்படி, அரசு மருத்துவமனையில் இதுவரை 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக திருச்சி அரசு மருத்துவ கல்லூரி முதல்வா் வனிதா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com