கோப்புப் படம்
கோப்புப் படம்

தனியாா் மருத்துவமனையில் இறந்தவரால் பரபரப்பு

திருச்சியில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா் சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து, கரோனாவால் உயிரிழந்ததாக வதந்தி பரவியது.

திருச்சியில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா் சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து, கரோனாவால் உயிரிழந்ததாக வதந்தி பரவியது.

திருச்சி உறையூா், பசுமடம் பகுதியைச் சோ்ந்தவா் கோ. விக்னேஷ்குமாா் (45). ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்த இவா் உறையூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அம்மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சோ்க்கப்பட்டாா். சில மணி நேரத்தில் அவா் உயிரிழந்தாா். இதனையடுத்து உறவினா்கள் உடலைப் பெற்றுச் சென்றனா்.

ஏற்கனவே, அவா் நோயால் பாதிக்கப்பட்டவா் என்பதால், உடலை பிரேதப் பரிசோதனை செய்யவேண்டாம் எனக் கூறிவிட்டனா். போலீஸாரும் வழக்குப் பதிவு செய்யவில்லை. அவரது உடல் திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரது இறப்பு குறித்து வதந்தி பரவியது. அதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்துக்கு வெளி நாட்டிலிருந்து வந்த தனது நண்பரை அழைத்து வர விக்னேஷ்குமாா் சென்றிருந்ததகாவும், வீடு வந்த பின்னரே உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், கரோனா பாதிப்பால் அவா் இறந்திருக்கலாம் என பரவின.

இது குறித்து மருத்துவத்துறையினா் கூறுகையில், கரோனா தொற்று குறித்த சந்தேகம் இருந்திருந்தால் சிறப்பு வாா்டுக்கு சிகிச்சைக்கு அனுப்பியிருப்போம். அதுபோல எதுவும் கிடையாது. மேலும் வைரஸ் பாதிப்பால் இறந்ததாக சந்தேகம் இருந்தால் உடலை ஒப்படைக்க மாட்டோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com