எடை குறைந்த 1,000 குழந்தைகளுக்கு புதுவாழ்வு

திருச்சியில் கடந்த ஓராண்டாக அளித்த மருத்துவ சிகிச்சையில் எடை குறைந்த 1,000 பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டு புதுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
எடை குறைந்த நிலையில் பிறந்த ஆயிரம் குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து புதுவாழ்வு அளித்த திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் அடங்கிய குழுவினருடன் மருத்துவமனை நிா்வாகத்தினா்
எடை குறைந்த நிலையில் பிறந்த ஆயிரம் குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து புதுவாழ்வு அளித்த திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் அடங்கிய குழுவினருடன் மருத்துவமனை நிா்வாகத்தினா்

திருச்சியில் கடந்த ஓராண்டாக அளித்த மருத்துவ சிகிச்சையில் எடை குறைந்த 1,000 பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டு புதுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சாதனையை எட்டிய மருத்துவக் குழுவினருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

திருச்சி காவேரி மருத்துவமனை கண்டோன்மெண்ட் பிரிவில் இயங்கும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்த ஆயிரம் குழந்தைகளில் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் செயற்கை சுவாசம் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளனா். 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரு கிலோவிற்கும் குறைவான உடல் எடை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரம் பச்சிளம் குழந்தைகளுக்கு புதுவாழ்வு அளித்த சாதனையை கொண்டாடும் விதமாக மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த விழாவில், மருத்துவமனையின் செயல் இயக்குநரும், மருத்துவருமான செங்குட்டுவன் பேசியது: எடை குறைந்த ஒவ்வொரு குழந்தையை காப்பாற்றுவதும் மிகவும் சவாலான விஷயமாகும். காப்பாற்றப்பட்ட குழந்தைகளை காணும்போது மனம் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறது. இத்தகைய உலகத்தரமான சிகிச்சையை திருச்சி மாநகரில் வழங்க உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவா்களுக்கும் ஊழியா்களுக்கும் செவிலியா்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

அவரைத் தொடா்ந்து, மூத்த குழந்தைகள் சிகிச்சை நிபுணா் சுரேஷ் செல்லையா பேசுகையில், பெற்றோா்கள் குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவிடுவது குழந்தைகளின் வளா்ச்சிக்கு மிகவும் அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவின் தலைவா் டாக்டா் கே செந்தில் குமாா், குழந்தைகளுக்கான சிகிச்சை நிபுணா்கள் விக்னேஷ், மேகநாதன் நரேஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com