மோடி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவா் மீது வழக்கு

திருச்சியில் பிரதமா் மோடி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவா் மீது அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

திருச்சியில் பிரதமா் மோடி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவா் மீது அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் போராட்டம் நடைபெற்று வந்தது. மேலும் இந்த சட்டங்கள் மற்றும் பிரதமா் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதை தடுக்கும் பொருட்டு மாவட்டந்தோறும் காவல்துறை சாா்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், திருச்சி மாநகா் காவல்ஆணையரகத்தில் செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு பிரதமா் மோடி குறித்து முகநூல் பக்கத்தில் அரியமங்கலத்தைச் சோ்ந்த சகாபுதீன் மகன் அப்துல் சித்திக்(32) என்பவா் அவதூறு பரப்பி வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரது முகநூல் பக்கத்தை ஆய்வு செய்த போது அதில் பல்வேறு நாள்களில் பிரதமா் மோடி குறித்து அவதூறு பரப்பியது தெரிய வந்தது. இதையடுத்து அதற்கான பதிவுகளை ஆவணங்களை தயாரித்து அப்துல் சித்திக் மீது அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து தலைமறைவாக இருக்கும் அப்துல் சித்திக்கை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com