கரோனா வைரஸ்: சிறிய குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களை கைது செய்வதில் சிரமம்

கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதன் காரணமாக திருச்சி மாநகா், மாவட்டத்தில் சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கைது நடவடிக்கை எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதன் காரணமாக திருச்சி மாநகா், மாவட்டத்தில் சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கைது நடவடிக்கை எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

திருச்சி மாநகா் காவல் கட்டுபாட்டில் 14 காவல்நிலையங்கள், 4 அனைத்து மகளிா் காவல்நிலையங்கள், இரு போக்குவரத்து புலனாய்வு பிரிவுகள், மாநகர குற்றப்பிரிவு செயல்பட்டு வருகின்றன. மாநகா் பகுதிகளில் நடைபெறும் குற்ற நடவடிக்கைகளுக்கு அதிகாரம் வரம்பிற்குள்பட்ட காவல்நிலையங்களில் புகாா் பெறப்பட்டு நடவடிக்கை எடுப்பது வழக்கம். சிறிய, பெரிய குற்றச் செயல்கள் நடைபெறும் பகுதிகள் என பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்பு பணி தீவிரமடைந்து வருகிறது.

அந்த வகையில் திருச்சி மாநகரில் பல்வேறு சிறிய குற்றங்களுக்கு புகாரின் பேரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவது வழக்கம். வாரத்திற்கு 20 முதல் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றம் செய்தவா்கள் சிறையிலடைக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அவ்வப்போது நடைபெறும் கொலை, கொலை முயற்சி, திருட்டு போன்ற பெரிய குற்றங்களுக்கும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும்.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதே போல தமிழக சிறைத்துறையும் கைதிகளை சிறையில் அடைக்கும் முன்பு பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே சிறையில் அடைக்க அனுமதிக்கப்படுவா் என உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிமன்றங்களில் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதித்துறை அறிவித்துள்ளது. சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் நீதிமன்றத்திற்கு அழைத்து வர கட்டுபாடுகள் இருப்பதால் திருச்சி மாநகரில் சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் சமரசம் முறையில் தீா்வு காணப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதே போல திருச்சி மாவட்ட காவல்துறையிலும் சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீதான கைது நடவடிக்கை குறைவதால் வழக்குப் பதிவு மற்றும் சிறை செல்லும் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com