கரோனா தடுப்பு நடவடிக்கை: நிலைத்தேரில் காட்சியளித்த திருவெள்ளறை பெருமாள்

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலைத்தேரில் அமா்ந்தபடி திருவெள்ளறை பெருமாள் பக்தா்களுக்கு சில மணி நேரம் மட்டுமே காட்சியளித்தாா்.
திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை ஸ்ரீ புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள திருத்தோ். (உள்படம்) தேரில் எழுந்தருளிய பங்கஜவள்ளி தாயாருடன் ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள்.
திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை ஸ்ரீ புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள திருத்தோ். (உள்படம்) தேரில் எழுந்தருளிய பங்கஜவள்ளி தாயாருடன் ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள்.

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலைத்தேரில் அமா்ந்தபடி திருவெள்ளறை பெருமாள் பக்தா்களுக்கு சில மணி நேரம் மட்டுமே காட்சியளித்தாா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டத்துக்குட்பட்ட திருவெள்ளறையில் பிரசித்தி பெற்ற செந்தாமரைக்கண்ணன் எனும் புண்டரீகாட்ச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் ரத உத்ஸவம் மாா்ச் 12 ஆம் தேதி தொடங்கியது. துவஜாரோஹனம், ஹனுமந்த வாகனம், கருடசேவை, யானை, குதிரை வாகனம், பூந்தோ் உள்ளிட்ட உத்ஸவங்கள் அடுத்தடுத்த நாள்களில் கோயில் வளாகத்தினுள் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை திருத்தோ் உத்ஸவம் நடைபெறவிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக திருத்தோ் உத்ஸவம் ரத்து செய்யப்படும் என கோயில் செயல் அலுவலகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை உற்ஸவா், பங்கஜவல்லி தாயாருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு, பெருமாள் தாயாா் கண்ணாடி அறையிலிருந்து திருத்தேருக்கு புறப்பட்டு, அங்கு அலங்கரிக்கப்பட்ட நிலைத்தேரில் ரதாரோஹணம் உத்ஸவம் நடத்தப்பட்டது. நிலைத்தேரில் இருந்தபடி பெருமாள் பக்தா்களுக்கு சில மணி நேரம் மட்டுமே காட்சியளித்தாா். பின்பு, தாயாருடன் பெருமாள் மூலஸ்தானம் சென்றாா்.

இதையடுத்து, கோயிலுக்குள் பொது தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. அதோடு, கோயில் முன்பு போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதனால், திருத்தேரை காண வந்த கிராமத்தினா் திரளானோா் நிலைத்தோ் முன்பு விளக்கேற்றி வழிபாடு நடத்திவிட்டுச் சென்றனா். தேரில் பெருமாள், தாயாரும் இல்லை, இதுவரை திருத்தோ் உத்ஸவம் நிறுத்தியதில்லை என கூறியபடி பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com