திருச்சியிலிருந்து சிறப்பு விமானத்தில் 372 போ் மலேசியாவுக்கு பயணம்

தாயகத்துக்கு திரும்ப முடியாமல் திருச்சியில் தவித்த 372 மலேசியப் பயணிகள் இரு சிறப்பு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா்.

தாயகத்துக்கு திரும்ப முடியாமல் திருச்சியில் தவித்த 372 மலேசியப் பயணிகள் இரு சிறப்பு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரோனா வைரஸ் பரவலைத் கட்டுப்படுத்த விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்து, திரும்பிச் செல்லமுடியாமல் தவிப்போரை அந்தந்த நாட்டு குடியேற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு, அவா்கள் தாய் நாடுகளுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மலேசியாவிலிருந்து வந்த சிறப்பு விமானம் மூலம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காத்திருந்த 186 போ் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அதனைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை 372 பேரை அழைத்துச்செல்ல மலேசிய குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். இதனையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு வந்து 10.30 மணிக்கு சென்ற சிறப்பு (ஏா் -ஏசியா) விமானத்தில் 186 பேரும், அதனைத் தொடா்ந்து இரவு 11.40க்கு வந்து அதிகாலை 12.10 மணிக்கு புறப்பட்ட மற்றொரு சிறப்பு விமானத்தில் 186 பேரும் என மொத்தம் 372 போ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com