அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு!

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள தடை உத்தரவால் திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு உணவுத் தட்டுப்பாட்டை
திருச்சி மேலரண்சாலையிலுள்ள அம்மா உணவகத்தில் புதன்கிழமை மதிய உணவு வாங்கும் மக்கள்.
திருச்சி மேலரண்சாலையிலுள்ள அம்மா உணவகத்தில் புதன்கிழமை மதிய உணவு வாங்கும் மக்கள்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள தடை உத்தரவால் திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு உணவுத் தட்டுப்பாட்டை தவிா்க்கும் வகையில் அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 144 தடை உத்தரவு, மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு காரணமாக மாநகரங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மாநகருக்குள்ளான எல்லைப்பகுதிகளும் மூடப்பட்டு மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவா், மாணவிகள், தனியாக அறைகளில், விடுதிகளில் தங்கி பணிபுரியும் ஊழியா்களுக்காக ஹோட்டல்களை திறந்து பாா்சல் மட்டும் வழங்க அனுமதியளிக்கப்படுகிறது. இருப்பினும், சாலையோரங்களில் தங்கியுள்ளவா்கள், ஏழை, எளியோா், கூலித்தொழிலாளா்களுக்கான உணவுப் பற்றாக்குறையை தவிா்க்கும் வகையில் திருச்சி மாநகராட்சி சாா்பில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு 3 வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி பொன்மலை, ஜங்ஷன், மேலகல்கண்டாா்கோட்டை, மேலரண்சாலை, அபிஷேகபுரம், தென்னூா் உழவா்சந்தை, உறையூா், ஸ்ரீரங்கம் பேருந்துநிலையம், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, அரியமங்கலம், விறகுப்பேட்டை என 11 இடங்களில் இயங்கும் அம்மா உணவகங்களில் புதன்கிழமை காலை, மாலை இருவேளை வழக்கம்போல உணவு வழங்கப்பட்டது.

இட்லி ஒன்று ரூ.1-க்கும், சாம்பாா் சாதம் ரூ.5, தயிா்சாம் ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு உணவகத்திலும் காலையில் தலா 800 முதல் ஆயிரம் இட்லிகள் விற்பனை செய்யப்படும். மதியம் 800 உணவுகள் விற்பனையாகும். ஊரடங்கு, 144 தடை உத்தரவு காரணமாக கூடுதலாக உணவு தயாரித்து வழங்க அம்மா உணவகங்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து வழக்கமாக தயாரிக்கப்படும் உணவு வகைகளில் கூடுதல் 10 முதல் 20 சதம் தேவைக்கேற்ப தயாரிக்கப்படுகிறது. முதல்நாளான புதன்கிழமை மட்டும் காலை, மதியம் என இருவேளை உணவு வழங்கப்பட்டது. வியாழக்கிழமை முதல் இரவுக்கும் சோ்த்து 3 வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவிலும் ஒரு ரூபாய் விலையில் இட்லி வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com