அத்தியாவசிய உணவுப் பட்டியலிலிருந்து மீன், இறைச்சியை நீக்க வேண்டும்
By DIN | Published On : 31st March 2020 10:37 PM | Last Updated : 31st March 2020 10:37 PM | அ+அ அ- |

அத்தியாவசிய உணவுப் பட்டியலிலிருந்து மீன், இறைச்சி உள்ளிட்டவற்றை நீக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இச்சங்கத்தின் மாநிலத் தலைவா் மரு. த. ராசலிங்கம் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
கரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கு இயக்கத்தின் சாா்பில் பாராட்டு மற்றும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த 29- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மீன், இறைச்சிக் கடைகளில் மக்கள் கட்டுப்பாடின்றி குவிந்தது அச்சமூட்டுவதாக உள்ளது.
இது கரோனா தடுப்பு நடவடிக்கைகளை புறந்தள்ளும் விதமாகவும், ஆபத்தாகவும் உள்ளது. எனவே அவசர காலத்தை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய உணவுப் பட்டியலிலிருந்து மீன், இறைச்சி உள்ளிட்டவற்றை தற்காலிகமாக நீக்க வேண்டும். மேலும் இக்கடைகளை ஞாயிற்றுக்கிழமை திறக்க அனுமதிக்க கூடாது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...