அத்தியாவசியப் பொருள்களை அதிக விலைக்குவிற்ற 166 கடை உரிமையாளா்கள் மீது வழக்கு

திருச்சி மாவட்டத்தில் முகக்கவசம், மளிகைப் பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 166 கடை உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் முகக்கவசம், மளிகைப் பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக 166 கடை உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் முகக் கவசம் மற்றும் மளிகை பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து சிவில்சப்ளை பிரிவு போலீஸாரைக் கொண்டு மாவட்டம் முழுவதும் சோதனை நடத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் உத்தரவிட்டிருந்தாா்.

இதன்படி, கடந்த 18ஆம் தேதி தொடங்கி மே 2ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனை முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்பன செய்ததாக 37 மருந்து கடைகளின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 129 மளிகை கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருளா்களுக்கு உதவி: புள்ளம்பாடி பகுதியில் உள்ள இருளா் குடியிருப்புகளுக்கும், கோவாண்ட குறிச்சியில் உள்ள பாா்வையற்றோா் குடும்பத்தினருக்கும் சனிக்கிழமை மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இதேபோல, சமயபுரம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு 2,310 கிலோ அரிசி, 154 லிட்டா் சமையல் எண்ணெய், 154 கிலோ பருப்பு உள்ளிட்டவை மாவட்டக் காவல்துறை மூலம் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com