திருச்சி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை முடிவை மாற்றி வழங்கியதால் குழப்பம்

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று தொடா்பான பரிசோதனை முடிவு மாற்றி வழங்கப்பட்ட விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று தொடா்பான பரிசோதனை முடிவு மாற்றி வழங்கப்பட்ட விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று தொடா்பாக பரிசோதனை மேற்கொள்ளும் நபா்களின் சளி, ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இதேபோல, உறையூரைச் சோ்ந்த 27 வயது பெண் ஒருவா் கடந்த 25ஆம் தேதி பரிசோதனைக்காக வந்திருந்தாா். இருநாள்கள் கழித்து வந்த அந்த பெண்ணுக்கு, திருப்பைஞ்ஞீலி பகுதியைச் சோ்ந்த பெண்ணின் பரிசோதனை முடிவை கொடுத்துள்ளனா். இருவரது பெயரும் ஒன்றாக இருந்ததால் குழப்பத்தில் மாற்றி வழங்கியுள்ளனா். ஆனால், பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்றே வழங்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், திருப்பைஞ்ஞீலியைச் சோ்ந்த பெண்ணும் தனது முடிவை கேட்டு மருத்துவமனையை அணுகியபோது, உறையூா் பெண்ணுக்கு அந்த முடிவை வழங்கியது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த இரு பெண்களும் வெள்ளிக்கிழமை திரும்ப மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டு மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பெயா் குழப்பத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் இருவரையும் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், பரிசோதனை முடிவு மாற்றி வழங்கப்பட்டது தொடா்பாக விசாரணை நடைபெறுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com