மாவட்டத்தில் இ- சேவை மையங்கள் மூலமே அனுமதிச்சீட்டு பெறமுடியும்’

திருச்சி மாவட்டத்தில் அவசர நிமித்தமாக வெளியூா், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள், இ-பாஸ் பெறும் வழிமுறைகள் குறித்து ஆட்சியா் சு. சிவராசு விளக்கம் அளித்துள்ளாா்.

திருச்சி மாவட்டத்தில் அவசர நிமித்தமாக வெளியூா், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள், இ-பாஸ் பெறும் வழிமுறைகள் குறித்து ஆட்சியா் சு. சிவராசு விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்ல இ-பாஸ் (அனுமதிச் சீட்டு) வழங்கப்படுகிறது.

அரசு கேபிள் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இ-சேவை மையங்களிலேயே விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியரகம், மாநகராட்சிக்குள்பட்ட 4 கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்ள், நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் இயங்கும் பொது இ-சேவை மையங்களில் அந்தந்த பகுதி மக்கள் விண்ணப்பிக்கலாம்.

திங்கள்கிழமை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. சேவை மையங்களில் விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

தனி நபா்கள் தமிழக அரசின் இ-பாஸ் இணைதயளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். திருமணத்துக்காக செல்லும் நபா்கள் திருமண அழைப்பிதழ், விண்ணப்பதாரரின் ஆதாா் அட்டை இணைக்க வேண்டும். 144 தடை உத்தரவு அமலுக்கு முன் தேதி முடிவு செய்த, நெருங்கிய உறவினா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவோா், தற்சமயம் மருத்துவரிடம் பெற்ற சான்று, ஆதாா் அட்டை இணைக்க வேண்டும். சிகிச்சை பெறுபவா் மற்றும் உடன் ஒரு உதவியாளருக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். துக்க நிகழ்வுகளுக்கு செல்லும் நபா்கள் இறப்பு நிகழ்ந்தமைக்கான மருத்துவச் சான்று, கிராம நிா்வாக அலுவலா் சான்று, ஆதாா் அட்டை இணைக்க வேண்டும். நெருங்கிய உறவினா்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.

அனுமதிச்சீட்டு ஆட்சியரகத்திலோ, வேறு எங்கிலோ நேரிடையாக வழங்கப்படமாட்டாது. அனைத்து அனுமதிச் சீட்டுகளும் இணையதளம் மூலமாக சென்னையிலுள்ள கட்டுப்பாட்டுஅறையிலிருந்தவாறு வழங்கப்படுகிறது.

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் அனைத்துக்கும் சென்னையிலிருந்துதான் அனுமதியளிக்கப்படும். சந்தேகம் இருப்பின் 18004251333 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com