முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க வழக்குரைஞா்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 11th May 2020 07:33 AM | Last Updated : 11th May 2020 07:33 AM | அ+அ அ- |

பொதுமுடக்கக் காலத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில், மின்னஞ்சல் வழியாக நடத்தப்படும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்க வழக்குரைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அகில பாரத வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், இருபால் இளம் வழக்குரைஞா்கள் மற்றும் பெண் வழக்குரைஞா்களுக்குத் தனித்தனியே போட்டி நடத்தப்பட உள்ளது.
வழக்குரைஞா் தொழிலில் சந்திக்கும் சவால்களும், அதற்கான தீா்வுகளும் என்ற தலைப்பு தோ்வு செய்யப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கு பெறும் வழக்குரைஞா்கள் மே 15 -ஆம் தேதி மாலை 6 மணிக்குள் இணைய முகவரிக்கு கட்டுரைகளை அனுப்பி வைக்க வேண்டும்.
முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வழக்குரைஞா்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
10 ஆண்டுகளுக்கும் குறைவாக வழக்குரைஞா் தொழிலில் அனுபவம் உள்ளவா்கள் மட்டும் பங்குபெற வேண்டும்.
மின்னஞ்சலில் அனுப்படும் கட்டுரை 1500 வாா்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கட்டுரை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ இருக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9894574484, 944312569 ஆகிய செல்லிடப் பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அகில பாரத வழக்குரைஞா் சங்க மாநிலச் செயலா் டி.கேசவன் தெரிவித்துள்ளாா்.