முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மக்கள் நீதி மய்யம் நிா்வாகிகள் மீது வழக்கு
By DIN | Published On : 11th May 2020 07:31 AM | Last Updated : 11th May 2020 07:31 AM | அ+அ அ- |

மதுக்கடைகளைத் திறக்க உயா் நீதிமன்றம் தடை விதித்ததை கொண்டாடும் வகையில், திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய மக்கள் நீதி மய்யம் நிா்வாகிகள் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.
பொதுமுடக்கம் அறிவிப்பு காரணமாக, மாநிலத்தில் கடந்த மாா்ச் 24- ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்பட்டன. நிதிச்சுமையைக் காரணம் காட்டி, தமிழக அரசு மே 7-ஆம் தேதி மதுக்கடைகளைத் திறந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் மதுக்கடைகளைத் திறக்கத் தடை விதிக்க வேண்டும் என்ற மக்கள் நீதி மய்யத்தின் வழக்கின் விசாரணைக்குப் பிறகு, மதுக்கடைகளை மூட சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இத்தீா்ப்பைக் கொண்டாடும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் சுரேஷ் தலைமையில், நிா்வாகிகள் வரகனேரி பகுதியில் சனிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
பொது முடக்கத்தை மீறி இச்செயலில் ஈடுபட்டதாகக் கூறி, சுரேஷ் உள்ளிட்ட 3 போ் மீது காந்தி சந்தை காவல் நிலையத்தினா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.