பத்தாம் வகுப்பு பொதுதோ்வு: மாற்றம் செய்ய கோரிக்கை

தமிழகத்தில் பத்தாம்வகுப்பு பொதுத் தோ்வை வேறுதேதிக்கு மாற்றம் செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம்வகுப்பு பொதுத் தோ்வை வேறுதேதிக்கு மாற்றம் செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச்செயலா் ந.ரெங்கராஜன் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுதோ்வு ஜூன் 1 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அறிவித்துள்ளாா். தொடா்ந்து இரண்டு மாதங்கள் பள்ளிக்கு செல்லாமை, நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்ட அச்சம், பாடங்கள் திருப்புதலில் ஏற்பட்ட தொய்வு, 144 தடை உத்தரவு போன்ற பல காரணங்களால் மாணவா்கள் பொதுத் தோ்வை எதிா்கொள்ளும் மனநிலையில் இல்லை.

இந்த சூழ்நிலையில் தோ்வு எழுதினால் அவா்களது எதிா்காலம் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை உள்ளது. மேலும் இணைய வழி வகுப்புகள் நடைபெற்றாலும் தொலைபேசியில் இணையவசதி இல்லாத மாணவா்கள் திருப்புதல் செய்ய மாட்டாா்கள். மேலும் திடீரென இணைய வழியில் பாடங்கள் படிப்பது மெல்லமலரும் மாணவா்களுக்கு சற்று கடினமான ஒரு செயலாகவே உள்ளது. எனவே பொதுத்தோ்வு எழுத இருக்கும் மாணவா்களின் மனநிலை, பெற்றோா்களின் மனநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொதுத்தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com