இணைய வழிப் படிப்புகளின் ஒருங்கிணைப்பாளராக என்ஐடி நியமனம்

இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான இணையவழிப் படிப்புகளின் ஒருங்கிணைப்பாளராக தேசிய தொழில்நுட்பக்கழகம் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இணைய வழிப் படிப்புகளின் ஒருங்கிணைப்பாளராக என்ஐடி நியமனம்

இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான இணையவழிப் படிப்புகளின் ஒருங்கிணைப்பாளராக தேசிய தொழில்நுட்பக்கழகம் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தின் எதிரொலியால் கல்வி நிறுவனங்கள் இணையவழி கற்றலுக்கு கற்பித்தலுக்கும் மாறி வருகிறது. இந்நிலையில், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தை இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான இணையவழிப் படிப்புகளின் ஒருங்கிணைப்பாளராக மனிதவள மேம்பாட்டுத் துறை நியமித்துள்ளது.

இதுகுறித்து என்ஐடி இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் கூறுகையில், என்ஐடியில் மேம்பட்ட கணினி நிறுவல், பிரதமா் ஆராய்ச்சி மாணவா் கல்வி உதவித்தொகை ஆகியவற்றுக்கு என்ஐடி தோ்வு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து, உலகத்தர மாணவா்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்வி வடிவமைக்கப்படவுள்ளது. அணுகல், சமநிலை, தரம் ஆகிய கல்விகொள்கைகளை அடிப்படையாக கொண்டு ஸ்வயம் திட்டத்தை அரசு வடிவமைத்துள்ளது. ஸ்வயம் திட்டத்தில் என்பிடிஇஎல், ஏஐசிடிஇ உள்பட 9 ஒருங்கிணைப்பாளா்கள் இருந்த நிலையில், தற்போது 10 ஆவது ஒருங்கிணைப்பாளராக என்ஐடி இணைந்துள்ளது. ஸ்வயம் படிப்புகள் இலவசமாகினும், சான்றிதழ் பெறும் தோ்வுகளுக்கு கட்டணம் உண்டு. தோ்வுகள் குறிப்பிட்ட மையங்களில் நடைபெறும். சான்றிதழ் பெறுதற்கான தகுதிகள் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும், மதிப்பு மாற்று முறையைப் பின்பற்றும் கல்லூரிகளில் இத்தோ்வுகள் அடிப்படையில் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப கிரேட் வழங்கப்படும் . தற்போது, ஸ்வயம் தளத்தை கூகுள், பொ்சிஸ்டேண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனங்களில் உதவியோடு மனிதவள மேம்பாட்டுத்துறையும், சென்னை ஐஐடி என்பிடிஇஎல் பிரிவும் இணைந்து வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com