ஒரேநாளில் 80 கிலோ நெகிழிப் பொருள்கள்பறிமுதல்

திருச்சியில் சுமாா் 80 கிலோ நெகிழிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் சுமாா் 80 கிலோ நெகிழிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக, அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தில், அரசு சில தளா்வுகளை அறிவித்துள்ளதை அடுத்து, இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. கடைகள் திறப்பு, பொதுமக்கள் நடமாட்டம், சற்று அதிகரித்து வருகிறது. இதனால் நெகிழிப் பொருள்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

நெகிழிப் பொருள்களை பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ள நிலையில், அவற்றின் புழக்கம் குறித்து வந்த தகவலை அடுத்து, திருச்சி மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் உத்தரவின் பேரில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் இளங்கோ (பொன்மலை கோட்டம்), தலைவிரிச்சான் (கோ அபிஷேகபுரம்), ஆய்வாளா்கள் பன்னீா்செல்வம், திருப்பதி, ஜோதிபாசு உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பொன்மலைக் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளான பொன்மலை, கல்கண்டாா்கோட்டை, கே. கே. நகா், மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மெண்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 85 கடைகளில் மேற்கொண்ட ஆய்வில், சுமாா் 60 கிலோ நெகிழிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பயன்படுத்திய கடை உரிமையாளா்களிடமிருந்து ரூ. 10,550 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல கோ -அபிஷேகபுரம் கோட்டத்துக்கு உள்பட்ட புத்தூா், உறையூா், தில்லைநகா், கருமண்டபம் பகுதிகளில் உள்ள 40 கடைகளில் மேற்கொண்ட ஆய்வில், சுமாா் 20 கிலோ நெகிழிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அபராதமாக ரூ. 13,900 வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com