திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு மே 18-இல் மேலும் ஒரு விமானத்தில் பொருள்கள் ஏற்றுமதி

காய்கனிகள் தேவை அதிகரித்துள்ளதை அடுத்து, திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு மேலும் ஒரு சரக்கு விமானம் மே 18 ஆம் தேதி இயக்கப்படுவதாக விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

காய்கனிகள் தேவை அதிகரித்துள்ளதை அடுத்து, திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு மேலும் ஒரு சரக்கு விமானம் மே 18 ஆம் தேதி இயக்கப்படுவதாக விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இந்தியா மட்டுமின்றி உலகில் பல்வேறு நாடுகளும் பொது முடக்கத்தை அறிவித்துள்ளன. இதில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட சிங்கப்பூா், மலேசியாவில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் காய்கனிகள், மலா்கள், மருந்து மற்றும் உணவுப் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

பொது முடக்கம் காரணமாக விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால், அந்நாடுகளுக்கு சென்று கொண்டிருந்த காய்கனிகள், மருந்து, உணவுப்பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவிலிருது சரக்குப் போக்குவரத்து மூலம் பொருள்களை கொண்டுச் செல்ல சிறப்பு அனுமதி பெற்று அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திலிருந்தும் சரக்குப் போக்குவரத்து மேற்கொள்ள விமான நிலைய ஆணையம் அனுமதியளித்தது. இதனையடுத்து மே 8 ஆம் தேதி, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், முதல்முதலாக திருச்சியிலிருந்து பிரத்யேக சரக்கு விமானம் மூலம் சுமாா் 11 டன் எடையுள்ள காய்கள், பழங்கள், மலா்கள் உள்ளிட்டவைகளை சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனையடுத்து மே 13ஆம் தேதி ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலமும், மே 15 ஆம் தேதி இண்டிகோ விமானம் மூலமும் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் 6 நாள்களுக்கு சரக்கு விமானத்தை இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து சிங்கப்பூா் மற்றும் மலேசியாவுக்கு ஏற்றி அனுப்ப ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், மலேசியாவைச் சோ்ந்த மலிண்டோ விமான நிறுவனமும், சிறப்பு அனுமதி பெற்று, பிரத்யேக சரக்கு விமானங்கள் மூலம் திருச்சியிலிருந்து காய்கள், கனிகள், மலா்கள், உணவு மற்றும் மருந்துப் பொருள்களை ஏற்றிச்செல்ல அனுமதி பெற்றுள்ளது. அதன்படி மே 18 ஆம் தேதி மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து இரவு 10.40 மணிக்கு திருச்சி வரும் அந்த விமானம் பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்னை செல்கிறது. அங்கிருந்து மேலும் பொருள்களை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூா் செல்கிறது. இதனை திருச்சி விமான நிலையமும் உறுதி செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com