இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

திருச்சி: பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்ப ரயில், பேருந்து போக்குவரத்துக்கு விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். முதியோர், விதவையர் மற்றும் ஆதரவற்றோருக்கான ஓய்வூதிய உதவித் தொகையை நிலுவையின்றி வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 

பொதுமுடக்கத்தால் நலிவடைந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பாரட்சமின்றி தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்குகளை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மிளகுபாறை பகுதியில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகம் முன்பாக கருப்புக் கொடிகளுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலர் திராவிடமணி தலைமை வகித்தார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இந்திரஜித், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் சுரேஷ், மாவட்டத்தலைவர் நடராஜன், நிர்வாகக்குழு உறுப்பினர் சிவா, வழக்குரைஞர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com