மகராஷ்டிரத்திலிருந்து திருச்சி வந்தடைந்த 494 தமிழர்கள்

மகராஷ்டிரத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் 494 பேர் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை காலை வருகை தந்தனர். 
மகராஷ்டிரத்திலிருந்து திருச்சி வந்தடைந்த 494 தமிழர்கள்

திருச்சி: மகராஷ்டிரத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் 494 பேர் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை காலை வருகை தந்தனர். 

இவர்களில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களைச் சேர்ந்த 469 பேர் மட்டும் அந்தந்த மாவட்டங்களுக்கு 12 அரசுப் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். 

இவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியரகம் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவர்களைத் தவிர, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேர் சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி தனிமைப்படுத்துதல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இங்கு கரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனைவரும் 14 நாள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக ஆட்சியர் சு. சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com