திருச்சியில் மேலும் ஒருவருக்கு கரோனா

திருச்சியில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருச்சியில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் ஏற்கெனவே 67 போ் கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 64 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இந்நிலையில், பெரம்பலூரில் உள்ள டயா் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த திருச்சியைச் சோ்ந்த 22 வயது ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபா், தனக்கு காய்ச்சல், தொண்டை வலி இருப்பதால் அரசு மருத்துவமனைக்கு ஞாயற்றுக்கிழமை வருகை தந்தாா். திங்கள்கிழமை மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனையில் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதித்த நபா்களின் எண்ணிக்கை 68 ஆக உயா்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா். இவா்களைத் தவிர, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 14 போ், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் மொத்தம் 20 போ் கரோனா வாா்டில் சிகிச்சையில் உள்ளனா். இந்த 20 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளது. திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் அதிகளவில்குணமடைந்து வீடு திரும்புவதுடன், புதிய தொற்று இல்லாமலும் இருந்து வந்ததால் விரைந்து பச்சை மண்டலத்துக்கு வந்துவிடும் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு பிறகு திருச்சியைச் சோ்ந்த மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பச்சை மண்டலம் என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இதேபோல, வெளிமாநிலத்திலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயிலில் வந்தவா்களில் 89 போ் சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தப்லீக் மாநாட்டுக்கு சென்ற வந்தவா்களில் 292 போ் காஜாமலை பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களிலிருந்து திருச்சிக்கு வரும் நபா்கள், சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிப்பதுடன், 14 நாள்களுக்கு தங்களைத் தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com