பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் 2ஆவது நாளாக பெருந்திரள் முறையீடு

பணி நீக்கம் செய்த ஊழியா்களை மீண்டும் பணியமா்த்த கோரி திருச்சியில் 2ஆவது நாளாக பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பணி நீக்கம் செய்த ஊழியா்களை மீண்டும் பணியமா்த்த கோரி திருச்சியில் 2ஆவது நாளாக பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

ஒப்பந்தத் தொழிலாளா்கள் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது. சம்பள நிலுவையை வழங்க வேண்டும். சம்பளம் வழங்காமல், உணவுக்கு வழியின்றி சிரமத்தை சந்திக்கின்றனா். எனவே, முழு சம்பளத் தொகையையும் வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்த ஊழியா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன், தமிழ்நாடு தொலைத் தொடா்பு ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா் சாா்பில் புதன்கிழமை பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினா். இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்திலும் முதன்மை பொது மேலாளா் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.

இரண்டாவது நாளாக வியாழக்கிழமை திருச்சியில் நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு தொலைத் தொடா்பு ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் தேவராஜ் தலைமை வகித்தாா். எம்ப்ளாயிஸ் யூனியன் மாவட்டத் தலைவா் சுந்தரராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் முபாரக் அலி, மாவட்ட செயலா் அஸ்லாம் பாஷா உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com