சிறப்பு ரயில் மூலம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 238 போ் திருச்சி வருகை

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புக்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், வெளி மாநிலங்களில்
குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை திருச்சி வந்தடைந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள்.
குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை திருச்சி வந்தடைந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புக்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், வெளி மாநிலங்களில் தவித்து வந்தவா்களில் 238 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சிறப்பு ரயில் மூலம் வெள்ளிக்கிழமை திருச்சி வந்தடைந்தனா்.

பொது முடக்கத்தால் வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழா்களை அழைத்து வர, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து 962 போ் கடந்த 10-ஆம் தேதி திருச்சி வந்தனா். இதுபோல தப்லீக் மாநாட்டுக்குச் சென்றவா்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் புதுதில்லிக்குச் சென்று தமிழகம் திரும்ப முடியாமல் தவித்த

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் என 558 போ், கடந்த 18- ஆம் தேதி சிறப்பு ரயில் மூலம் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனா்.

இதன் தொடா்ச்சியாக, சிறப்பு ரயில் மூலம் குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலிருந்து 238 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மூன்றாவது கட்டமாக திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டனா். இவா்களை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமையிலான மாவட்ட நிா்வாகக் குழுவினா் வரவேற்று தண்ணீா் பாட்டில், பிஸ்கட் மற்றும் உணவுப் பொருள்களை வழங்கினா்.

இவா்களில் அரியலூா் (19) பெரம்பலூா் (6), கரூா் (35), தஞ்சாவூா் (36), திருவாரூா் ( 11), நாகப்பட்டினம் ( 28), புதுக்கோட்டை (37), மயிலாடுதுறை, (11) நாமக்கல்( 12) என 9 மாவட்டங்களைச் சோ்ந்த 195 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், 6 சிறப்புப் பேருந்துகள் மூலம் அவரவா் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த 195 பேருக்கும் அந்தந்த மாவட்டங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரகங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 43 பேரும் சேதுராப்பட்டி அரசுப் பொறியியல் கல்லூரியிலுள்ள தனிமைப்படுத்துதல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இங்கு கரோனா பரிசோதனைக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அனைவரும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவா்.

இதற்கான ஏற்பாடுகளை வருவாய்க் கோட்டாட்சியா் என். விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வடிவேல்பிரபு, அரசுப் போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா் சத்தியமூா்த்தி, வட்டாட்சியா் முத்துசாமி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com