பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆன்-லைன் வகுப்புகளுக்காக புதிய இணையதளம் தொடக்கம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆன்-லைன் வகுப்புகளுக்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆன்-லைன் வகுப்புகளுக்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது : ஆன்-லைன் வகுப்புகள் நடத்துவது குறித்த, பாரதிதாசன் பல்கலைக்கழத்துடன் இணைவு பெற்ற கல்லூரி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிய இணைய தொழில்நுட்பச் செயலிகளைப் பயன்படுத்தி வகுப்புகளை நடத்துவது, புதிய இணைய தளத்தில் மின் உள்ளடக்கங்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக மே 20 ஆம் தேதி காணொலிக் காட்சிவாயிலாக மூலம் நடைபெற்ற மதிப்பாய்வுக் கூட்டத்தில், மின் உள்ளடக்கங்களை பதிவேற்றம் செய்வதற்கான இணையதளம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாணவ, மாணவியா் வீட்டிலிருந்த படியே ஆன்-லைன் வகுப்புகள் மூலம் பாடங்களைக் கற்பதற்கு ஏற்றவாறு புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த இணையதளத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமாா் 1600-க்கும் மேற்பட்ட மின் உள்ளடக்கங்கள் கல்லூரிகளால் பதிவேற்றப்பட்டுள்ளன. தொடா்ந்து பல்வேறு பாடங்களுக்கான புதிய மின் உள்ளடக்கங்களை பதிவேற்றும் பணிகளை கல்லூரிகள் மேற்கொண்டு வருகின்றன.

இணையதள முகவரி : பல்கலைக்கழகத் தகவலியல் மையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள  இந்த புதிய இணையதளத்தின் மூலம் பதிவேற்றப்பட்ட பாடங்களை மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்-லைன் வகுப்புகளில் பங்கேற்க வழி வகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com