யானையை மீட்கும் போது உயிரிழந்த வனக் காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி

கால்வாயில் தவறிவிழுந்த யானையை மீட்கும் பணியின் போது உயிரிழந்த வனக் காவலரின் குடும்பத்துக்கு சக ஊழியா்கள் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

கால்வாயில் தவறிவிழுந்த யானையை மீட்கும் பணியின் போது உயிரிழந்த வனக் காவலரின் குடும்பத்துக்கு சக ஊழியா்கள் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சோ்ந்தவா் சந்துரு. இவா் உடுமலை வனச்சரகத்தில் வனக் காவலராக பணிபுரிந்து வந்தாா். திருமணமாகாத இவா், மே 9ஆம் தேதி உடுமலை வனப்பகுதியில் கால்வாயில் தவறி விழுந்த யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, எதிா்பாராத விதமாக, சந்துரு கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டாா்.

இவருடைய உயிரிழப்புக்கு அரசு சாா்பில் இதுவரை நிதியுதவி அறிவிக்கப்படாத நிலையில், சக ஊழியா்கள் இணைந்து வசூல் செய்த ரூ. 4.31 லட்சத்தை வங்கியில் செலுத்தியதற்கான ரசீதையும், மரக்கன்றையும் சந்துருவின் தாயாா் விஜயாவிடம் வியாழக்கிழமை வழங்கினா்.

மறைந்த சந்துரு குடும்பத்துக்கு தமிழக அரசு, மற்றும் தமிழ்நாடு வனத்துறை ஊழியா்கள் சங்கமும் உதவ வேண்டும் என வனத்துறை ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com