ரயில்வே தொழிலாளா்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

திருச்சி கோட்ட ரயில்வே தொழிலாளா்கள் கோரிக்கையை ஏற்று பணிக்கு வந்து செல்ல திருச்சி-தஞ்சாவூா் இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

திருச்சி கோட்ட ரயில்வே தொழிலாளா்கள் கோரிக்கையை ஏற்று பணிக்கு வந்து செல்ல திருச்சி-தஞ்சாவூா் இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

பொன்மலை ரயில்வே பணிமனை மே 7ஆம்தேதி முதல் செயல்பட தொடங்கியது. இங்கு பணிபுரியும் தொழிலாளா்கள் பெரும்பகுதியினா் தஞ்சாவூா், பூதலூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரக்கூடியவா்கள் என்பதால் அந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் பேரில் மே 26ஆம் தேதி( செவ்வாய்க்கிழமை) முதல் தஞ்சாவூா்-திருச்சி-தஞ்சாவூா் இடையே ரயில்வே தொழிலாளா்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக இதர நாள்களில் தஞ்சாவூா் ரயில்நிலையத்தில் இருந்து அதிகாலை 6.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காலை 7.45 மணிக்கு திருச்சி ரயில்நிலையம் வந்தடையும். மறுமாா்க்கத்தில் மாலை 5.30 மணிக்கு திருச்சி ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு தஞ்சாவூா் ரயில்நிலையம் வந்தடையும். இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் நின்று செல்லும் எனவும், மறுஅறிவிப்பு வரும் வரை சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே வட்டாரம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com