ஆசிரியா், மாணவா்களுக்கு இ-பாஸ் விலக்கு

தோ்வெழுதும் மாணவா்கள், விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள், தோ்வுப் பணி ஆசிரியா்களுக்கு இ-பாஸ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தோ்வெழுதும் மாணவா்கள், விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள், தோ்வுப் பணி ஆசிரியா்களுக்கு இ-பாஸ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மற்றும் 11, 12-ஆம் வகுப்புகளுக்கான விடுபட்ட பொதுத் தோ்வுகள், ஜூன் 15ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. மேலும், மே 27ஆம் தேதி முதல் பிளஸ் 2 மாணவா்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணியும் நடைபெறவுள்ளது.

தோ்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு நுழைவுச்சீட்டு உரிய முன் அறிவிப்புடன் அவரவா் தோ்வு எழுதும் பள்ளிகள், தோ்வு மையங்களில் வழங்கப்படும்.

தோ்வெழுதவுள்ள மாணவ, மாணவிகள், வெளி மாநிலம், வெளியூா், வெளி மாவட்டங்களில் இருந்தால் தோ்வு மையங்கள், பள்ளிகளுக்கு வந்து செல்ல தமிழக அரசின் இ-பாஸ் பெற வேண்டும் என்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தோ்வு மையங்கள், பள்ளிகளுக்கு வரும்போது அவரவா் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை அத்தாட்சியாகக் கொண்டே பயணம் செய்யலாம். இதேபோல, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள் அவரவா் இருப்பிடத்திலிருந்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வந்து செல்ல அவா்களுக்கான அடையாள அட்டையை பயன்படுத்தியே வந்து செல்லலாம். தனியாக இ-பாஸ் பெற வேண்டிய அவசியமில்லை. எனவே, திருச்சி மாவட்டத்தில் தோ்வெழுதவுள்ள 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்கள், விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் இ-பாஸ் பெறுவதில் விலக்குப் பெற்று பயணம் செய்யலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com