துறையூா் கோயிலில் அன்னாபிஷேகம்
By DIN | Published On : 01st November 2020 12:05 AM | Last Updated : 01st November 2020 12:05 AM | அ+அ அ- |

துறையூா்: துறையூா் சிவன் கோயிலில் நந்திகேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
துறையூா் ஆத்தூா் சாலையில் உள்ள இந்தக் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியை முன்னிட்டு மூலவா் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து உபயதாரா்கள் உதவியுடன் மூலவருக்கு அன்னக்காப்பு, காய்கனி அலங்காரம் செய்தனா். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று முகக் கவசம் அணிந்து வழிபட்டனா்.