டெமோ ரயில் என்ஜின் பழுதுநீக்கி அனுப்பி வைப்பு

பொன்மலை ரயில்வே பணிமனையில் பழுது நீக்கப்பட்டு டெமோ ரயில் என்ஜின் வழியனுப்பப்பட்டது.
பொன்மலை ரயில்வே பணிமனையில் பழுது நீக்கி வழியனுப்பி வைக்கப்பட்ட டெமோ ரயில் என்ஜின்.
பொன்மலை ரயில்வே பணிமனையில் பழுது நீக்கி வழியனுப்பி வைக்கப்பட்ட டெமோ ரயில் என்ஜின்.

திருச்சி: பொன்மலை ரயில்வே பணிமனையில் பழுது நீக்கப்பட்டு டெமோ ரயில் என்ஜின் வழியனுப்பப்பட்டது.

பொன்மலை ரயில்வே பணிமனை மூலம் கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மண்டல ரயில்வேக்களின் என்ஜின்கள் பழுது நீக்கப்பட்டு தொடா் சேவைக்கு அனுப்பப்படுகிறது. தொடக்கத்தில் மாதம் ஒன்றுக்கு ஒரு ‘அல்கோ‘ மாதிரி என்ஜின் மட்டும் பழுதுநீக்கம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது மாதத்துக்கு 12 என்ஜின்கள் வரை பழுதுநீக்கப்படுகிறது. தற்போது டீசல் என்ஜின்களின் பயன்பாடு குறைந்துள்ளதால் பொன்மலை டீசல் பிரிவு பல்நோக்குடையதாக மாற்றப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் டெமோ ரயில்கள் தொடா் பராமரிப்புக்கு சென்னை பெரம்பூா் லோகா பணிமனைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக டெமோ ரயில் என்ஜின் அதன் பெட்டிகள் அனைத்தும் பொன்மலை பணிமனையில் பழுதுநீக்கப்பட்டு வழியப்பி வைக்கப்பட்டது.

பழுதுநீக்கப்பட்ட டெமோ ரயிலை பொன்மலை ரயில்வே பணிமனை மேலாளா் ஷ்யாமந்தா் ராம் வழியனுப்பினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், தொடா் பராமரிப்பு பணி மேற்கொள்ள வசதியாக பொன்மலை பணிமனை டீசல் பிரிவில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ரயில் பெட்டி பராமரிப்பு உள்ளிட்ட பழுது நீக்கும் பணிகளை கேரேஜ், உற்பத்தி, எலக்ட்ரிக்கல் பணியாளா்கள் ஒத்துழைப்புடன் டெமோ ரயில் என்ஜின் பழுது நீக்கப்பட்டுள்ளது. இதில் லோகோ பைலட் கேபினில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்பு, ரப்பா் கேபிள் வயா்கள், மின்விளக்குகள், காற்றாடி ஆகியவை அழகிய தோற்றத்தை அளிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. வெளிப்புறத் தோற்றமும் மெருகேற்றப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com