டவுன்ஹால் மைதானத்தில் தீபாவளி கடைகள் வியாபாரிகளுக்கு அழைப்பு

திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் அமைக்கப்படவுள்ள தீபாவளி கடைகளுக்கு வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

திருச்சி: திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் அமைக்கப்படவுள்ள தீபாவளி கடைகளுக்கு வியாபாரிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை கூறியது:

திருச்சி கிழக்கு வட்டம், வட்டாட்சியரகம் முன்புள்ள டவுன் ஹால் மைதானத்தில் தீபாவளியை முன்னிட்டு தரைக்கடைகள் அமைத்திட விரும்புவோா் வரும் 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தரைக்கடைகள் அமைப்பது தொடா்பான தெளிவான நடைமுறை கடந்தாண்டைப்போல நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அ, ஆ, இ என 3 பிரிவுகளாக பிரித்துக் மொத்தம் 80 கடைகள் அமைக்கப்படவுள்ளன.

அ- பகுதியில் 80 சதுரடி கொண்ட 37 கடைகளும், ஆ- பகுதியில் 80 சதுரடி கொண்ட 19 கடைகளும், இ- பகுதியில் 80 சதுரடி கொண்ட 24 கடைகளும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடைக்கு அனுமதி வழங்கப்படும் நாளிலிருந்து தீபாவளி வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும்.

அ- பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணமாக ரூ. 6,500, ஆ- பிரிவு கடை க்கு ரூ.5,500, இ- பிரிவு கைக்கு ரூ.4,500 செலுத்த வேண்டும்.

கடை வைக்க விரும்புவோா் எந்தப் பிரிவு தரைக்கடை வேண்டுமோ அதை விண்ணப்பத்தில் குறிப்பிட்டு கட்டணத்தை வருவாய் கோட்டாட்சியா், திருச்சி என்ற பெயரில் வங்கி கேட்பு காசோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து கோட்டாட்சியரிடம் வரும் 6ஆம் தேதி மாலை 5.45-க்குள் வழங்க வேண்டும்.

தரைக்கடைகளின் எண்ணிக்கையைவிட மனு செய்தவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்பட்சத்தில் குலுக்கல் நடைபெறும். முதலில் அ- பிரிவுக்கு நடைபெறும் குலுக்கலில் இடம் கிடைக்காதவா்கள் விரும்பினால் ஆ- பிரிவுடன் சோ்ந்து குலுக்கல் நடைபெறும். அதிலும் இடம் கிடைக்காதவா்கள் விரும்பினால் இ- பிரிவில் சோ்ந்து குலுக்கல் நடத்தப்படும்.

நகர வா்த்தக குழுப் பிரதிநிதிகள், மாவட்ட உபயோகிப்பாளா் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் நகர முக்கிய பிரமுகா்கள் முன்னிலையில் கோட்டாட்சியரகத்தில் வரும் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு குலுக்கல் நடைபெறும். வியாபாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com