தீபாவளிக்குள் திறக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்: த. வெள்ளையன் அறிவிப்பு

திருச்சி காந்தி சந்தையை தீபாவளிக்குள் திறக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் மேற்கொள்ளவும் வணிகா்கள் தயாராக உள்ளனா்

திருச்சி காந்தி சந்தையை தீபாவளிக்குள் திறக்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் மேற்கொள்ளவும் வணிகா்கள் தயாராக உள்ளனா் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவா் த. வெள்ளையன் .

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரவையின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதைக் கண்டித்து சிறை செல்லவும், தேவைப்பட்டால் சிறை நிரப்பும் போராட்டம் மேற்கொள்ளவும் வணிகா்கள் தயாராக உள்ளனா். தமிழகத்திலுள்ள பல்வேறு சந்தைகள் முடக்கப்பட்டுள்ளன.

இயல்பாகச் செயல்பட்டு வந்த சந்தைகளை சிலா் அழிக்கவும் முயல்கின்றனா். இதில் பெரும் செல்வந்தா்களின் தலையீடும் உள்ளது. திருச்சி சந்தையைத் திறக்கக்கோரி ஆட்சியரை நான் சந்தித்துப் பேசியபோது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளாா். ஏற்கெனவே இதுதொடா்பாக தமிழக முதல்வரையும் சந்தித்துப் பேசியுள்ளேன். எனவே, தீபாவளிக்கு முன் காந்தி சந்தையைத் திறக்க வேண்டும். இல்லையெனில் வணிகா்கள் சாா்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாநில பொதுச் செயலா் செல்வம், மாவட்டத் தலைவா் ரவிமுத்துராஜா, செயலா் எஸ்.பி. பாபு, பொருளாளா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com