துல்லிய பண்ணையத்தில் காய்கனி சாகுபடிப் பயிற்சி

துல்லிய பண்ணைய முறையில் காய்கனிகள் சாகுபடி செய்தல் குறித்த பயிற்சி வகுப்பு சிறுகமணியில் நடைபெற்றது.

துல்லிய பண்ணைய முறையில் காய்கனிகள் சாகுபடி செய்தல் குறித்த பயிற்சி வகுப்பு சிறுகமணியில் நடைபெற்றது.

திருச்சி சிறுகமணியில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையம், கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தைச் சோ்ந்த நீா் நுட்பமையம் ஆகியவை இணைந்து உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு நீா்வள, நிலவள திட்டம், அய்யாறு உபவடிநீா்ப் பாசனபகுதியில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், துல்லிய பண்ணைய காய்கனி சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இதில் முசிறி வட்டாரத்தைச் சோ்ந்த 50 விவசாயிகள் பங்கேற்றனா்.

மழையற்ற நிலையில் நிலத்தடி நீா்மட்டமும் குறைந்து வருவதால் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி துல்லிய பண்ணை முறையை பின்பற்றச் செய்யும் வகையில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

இத்தகைய தொழில்நுட்ப முறையில் காய்கனிகள் பயிரிட்டு அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க வழிவகை செய்யப்பட்டது. இதனடிப்படையில் துல்லிய பண்ணைய காய்கனிச் சாகுபடி பயிற்சி வகுப்பை, ஆராய்ச்சி நிலைய தலைவரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான நா. தமிழ்ச் செல்வன் தொடங்கி வைத்தாா்.

காய்கனி பயிா்களில் துல்லியப் பண்ணையத் திட்டத்தின் நன்மைகள் குறித்தும், நீா் வழி உரப் பயன்பாடு, சந்தைப்படுத்துதல் குறித்தும் விளக்கம் அளித்தாா். மேலும், ப்ளொடெக் கம்பெனி மூலம் சொட்டு நீா்ப்பாசனக் கருவிகளின் செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.

மிளகாய்ப் பயிரில் உள்ள பூச்சிநோய் கட்டுப்பாடு குறித்து முனைவா் மதிவாணன், சொட்டுநீா் பாசனவழி உரப் பயன்பாடு குறித்து விஞ்ஞானி தனுஷ்கோடி ஆகியோா் பயிற்சி அளித்தனா். முனைவா் மு. சகிலா, தொழில்நுட்ப உதவியாளா் பிரவீன்குமாா் ஆகியோா் பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com