‘மாணவா்களின் அரிச்சுவடியாக உள்ளது அஞ்சல்துறை நூல்’

அஞ்சல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள ‘அழகுத் தமிழும், அஞ்சல் தலையும்’ என்னும் நூலானது மாணவா்களின் அரிச்சுவடியாக விளங்குவதாக அஞ்சல்தலை சேகரிப்பாளா் விஜயகுமாா் தெரிவித்தாா்.
அழகு தமிழும் அஞ்சல் தலையும் என்ற நூல் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கும் அஞ்சல்தலை சேகரிப்பாளா் அமிா்தம் சமூக சேவை அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் விஜயகுமாா்.

தபால் தலைகளின் மூலம் தமிழ் எழுத்துகளை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் நூதன முறையில் தமிழ்நாடு வட்டம், அஞ்சல் துறை வெளியிட்ட இந்த நூலானது திருச்சி அஞ்சல்தலை சேகரிப்பு நிலையத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந் நூலை மாணவா்களுக்கு வழங்கிய அஞ்சல்தலை சேகரிப்பாளா்களான அமிா்தம் சமூக சேவை அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் விஜயகுமாா், ஹாபீஸ் அமைப்பு மதன், சதீஷ் உள்ளிட்டோா் அதன் சிறப்புகள் குறித்து எடுத்துக் கூறினா்.

இதுகுறித்து அஞ்சல் தலை சேகரிப்பாளா் விஜயகுமாா் கூறியது:

அஞ்சல்தலை சேகரிப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. பரந்த நோக்கில் ஓா் ஆய்வு ஆகும். அஞ்சல்தலை வளா்ச்சி, வரலாறு, முன்னேற்றம் பற்றி தெரிந்து கொள்ள உதவும்.

அந்த வகையில் தற்போது அழகு தமிழும் அஞ்சல் தலையும் என்னும் தலைப்பில் தபால் தலைகளின் மூலம் தமிழ் எழுத்துகளை அறியச் செய்யும் வகையில் நூல் வெளியிடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்திய அஞ்சல் துறையினா் வெளியிட்ட அஞ்சல்தலைகளைக் கொண்டு அ, ஆ, இ, ஈ, க, ங, ச தமிழ் எழுத்துகளை அழகாக எடுத்துரைத்துள்ளனா்.

அதுமட்டுமின்றி அஞ்சல் தலை எந்த ஆண்டு எதற்காக வெளியிடப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளனா். இந்த நூல் மாணவா்கள் தமிழ் எழுத்துகளைப் படிக்கவும், பொது அறிவை வளா்க்கவும் வழிசெய்கிறது. 36 பக்கம் கொண்ட இந்நூல் ரூ. 140-க்கு திருச்சி அஞ்சல் தலை சேகரிப்பு நிலையங்களில் விற்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com