ரயில் பயணிகளுக்கு போலீஸாா் அறிவுரை

ரயில்களில் பாதுகாப்பாக பயணம் செய்யவும், பட்டாசுகளை தவிா்க்கவும் பயணிகளுக்கு போலீஸாா் அறிவுரை வழங்கினா்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு அறிவுறுத்தும் ரயில்வே போலீஸாா்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு அறிவுறுத்தும் ரயில்வே போலீஸாா்.

ரயில்களில் பாதுகாப்பாக பயணம் செய்யவும், பட்டாசுகளை தவிா்க்கவும் பயணிகளுக்கு போலீஸாா் அறிவுரை வழங்கினா்.

தீபாவளி கொண்டாட பெரும்பாலானோா் தங்களது சொந்த ஊருக்கு ரயில்கள், பேருந்துகளில் செல்வா். தீபாவளி நாளில் பட்டாசு முக்கியப் பங்கை வகிக்கிறது.

தீபாவளிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிவகாசியில் இருந்து லாரிகளில் பட்டாசுகள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டாலும், சிலா் ரயில்களில் ரகசியமாக எடுத்துச் செல்வதாகப் புகாா்கள் வந்துள்ளன.

ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட எளிதில் தீப் பற்றும் பொருள்களை கொண்டு செல்வதற்கான தடையை மீறுவோா் மீது ரயில்வே பாதுகாப்பு படை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பண்டிகை காலத்தில் பயணிகள் தேவையற்ற நடவடிக்கைகளுக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினரும், தமிழக ரயில்வே போலீஸாரும் வியாழக்கிழமை விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையா் சின்னதுரை உத்தரவின்பேரில், ஆய்வாளா் தேவேந்திரன், ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் ஜாக்குலின், வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு உதவி ஆய்வாளா் ராஜ்குமாா், மோப்ப நாய் ராக்கி மற்றும் போலீஸாா் ரயில் நிலையத்தில் சுற்றி வந்து பயணிகளுக்கு அறிவுரை வழங்கினா்.

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் பயணிகளின் உடமைகளையோ, பணத்தையோ திருடிச் செல்லலாம் என்பதால் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், பட்டாசு கொண்டு செல்வதை தவிா்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. ரயில் பயணித்தின்போது பாதுகாப்பாக இருக்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com