ஐப்பசி அமாவாசையையொட்டி கேதார கௌரி விரதம்
By DIN | Published On : 16th November 2020 05:25 AM | Last Updated : 16th November 2020 05:25 AM | அ+அ அ- |

மணப்பாறையில் கேதார கௌரி விரத வழிபாடு செய்த பெண்கள்.
ஐப்பசி அமாவாசையையொட்டி மணப்பாறையில் பெண்கள் சனிக்கிழமை கேதார கௌரி விரதம் இருந்தனா்.
ஸ்கந்த புராணத்தின்படி கேதார கௌரி விரதம் 21 நாள் இருந்து ஐப்பசி அமாவாசை தினத்தன்று பெண்கள் சிவனை வணங்கினால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும், மாங்கல்ய பலம் நீடிக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி சனிக்கிழமை ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு மணப்பாறையில் தனியாா் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விரதம் இருப்பவா்கள் குடும்பத்தினா் புத்தாடை அணிந்து அரளி மலா், அரளி இலை, வாழைப்பழங்கள், அதிரசம், வெற்றிலை, பாக்கு, விரலி மஞ்சள் ஆகியவற்றை 21 என்ற எண்ணிக்கையில் புதிய முறத்தில் வைத்து, தேங்காய், சீப்பு, கண்ணாடி, குங்குமம் ஆகியவற்றுடன் அம்மனுக்கு பூஜை செய்தனா்.
அங்கு புரோகிதா் இந்த பூஜையின் நன்மையை பக்தா்களுக்கு விளக்கினாா். அதன் பின் வீடு திரும்பியதும் பெண்கள் விரதம் விட்டு பூஜையை நிறைவு செய்தனா். மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனா்.