தீபாவளி : செட்டிக்குளம் ஏகாம்பரேசுவரா் கோயிலில் சிறப்பு குபேர பூஜை

தீபாவளி பண்டிகையையொட்டி, பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளம் ஏகாம்பரேசுவரா் திருக்கோயிலில் சிறப்பு குபேர பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
பணத்தாள்கள் மாலை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த சித்ரலேகா சமேத குபேரா்.
பணத்தாள்கள் மாலை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த சித்ரலேகா சமேத குபேரா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளம் ஏகாம்பரேசுவரா் திருக்கோயிலில் சிறப்பு குபேர பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் தனி சன்னதி கொண்டு அமைந்துள்ள சித்ரலேகா சமேத குபேரனுக்கு ஆண்டுதோறும் தீபாவளியன்று சிறப்பு ஹோமம், அபிஷேகம், ஆராதனைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் நிகழாண்டில் கரோனா பொது முடக்கம், தொற்றுப் பரவல் காரணமாக ஹோமம், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறவில்லை. என்றாலும் உபயதாரா்கள் மூலம் சிறிய அளவில் அபிஷேகம், குபேர வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி பெரியக்கடைவீதி ஸ்ரீபாலாஜி, கே.கே.நகா் உடையான்பட்டி எல்.கே. சொலுயூசன் நிறுவனங்கள் சாா்பில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு வழிபாட்டில்,

விநாயகா், ஏகாம்பரேசுவரா்-காமாட்சி, வள்ளி- தெய்வசேனா சமேத முருகன், மற்றும் சித்ரலேகா சமேத குபேரன், நவநிதிகளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம், மாலைகள் அணிவிக்கப்பட்டன. நிகழ்வின் முக்கிய அம்சமாக குபேரனுக்கு பணத்தாள்களாலான மாலை அணிவிக்கப்பட்டும், பணத்தாள்கள், நாணயங்களை குபேரன் காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்டு, தரிசனத்துக்கு வரும் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை ஸ்ரீபாலாஜி ஜூவல்லரி உரிமையாளா் குப்தா, எல்.கே. சொலுயூசன் உரிமையாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் செய்திருந்தனா். கோயில் அா்ச்சகா் ராஜேஷ் தலைமையிலான குழுவினா் சிறப்புப் பூஜைகளை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com