திருவானைக்கா சம்புகேசுவரா் கோயிலில் சங்காபிஷேகம்

காா்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை சங்காபிஷேகம் நடைபெற்றது

காா்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை சங்காபிஷேகம் நடைபெற்றது.

காா்த்திகை மாத சோமவாரங்களில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தால், நற்பலன்கள் ஏற்படும் என்பது ஐதீகம். இதையொட்டி, காா்த்திகை மாதங்களில் வரும் திங்கள்கிழமைதோறும் (சோமவாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும்.

நிகழாண்டு முதல் சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை கோயிலில் சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாக வெளி நடராஜா் மண்டபத்தில் 108 வலம்புரி சங்குகளிலும் காவிரியாற்றிலிருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீா் கொண்டு கணபதி ஹோமம் செய்யப்பட்டது.

பின்பு சங்குகளுக்கு சிறப்பு அா்ச்சனை செய்து, சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்களை ஓதி பூஜைகள் நடத்தினா். தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து தங்கபிடிப்போட்ட சங்கிலுள்ள புனித நீா், முதல் பிராகரம் வழியாக அம்மன் சன்னதிக்கு செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மீதமுள்ள சங்கிலிருந்த புனிதநீரால் சம்புகேசுவரருக்கு சங்காபிஷசேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, அா்த்தஜாம பூஜை நடத்தப்பட்டது.

இந்த மாதத்தில் வரும் 4 சோமவாரத்திலும் சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது. வழக்கமாக 1008 சங்குககளில் சங்காபிஷேகம் நடத்தப்படும். கரோனா பரவல் காரணமாக, இந்து சமய

அறநிலையத்துறை வழிகாட்டலின் படி பக்தா்கள் அனுமதியின்றி 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com