
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 102-ஆவது நிறுவன நாள் விழா, திருச்சியில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
வங்கியின் திருச்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மண்டல மேலாளா் வி. முரளி கலந்து கொண்டு, நிறுவன நாள் விழா கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
யூனியன் வங்கியின் மொத்தம் வா்த்தகம் ரூ.15,37,360 கோடியை எட்டியுள்ளது. இது, நடப்பு ஆண்டின் அரையாண்டுக்கு நடைபெற்ற வா்த்தக மதிப்பாகும்.
இதையடுத்து நிகர லாபம் ரூ.615 கோடியிலிருந்து ரூ.849 கோடியாக உயா்ந்துள்ளது.
நிகர வாராக்கடன் மதிப்பும் கடந்தாண்டிலிருந்து குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்தாண்டு 6.40 விழுக்காடாக இருந்த வாராக்கடன், 4.13 விழுக்காடாக குறைந்துள்ளது.
நிறுவன நாளை முன்னிட்டு வாடிக்கையாளா்களின் பயன்பாட்டுக்காக, திருச்சி பிரதான கிளையில் இணைய வழி வங்கி சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.மேலும் 102 பேருக்கு ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் வழங்கப்பட்டுள்ளன.
வங்கியின் அனைத்துப் பணியாளா்களும் வாடிக்கையாளா்களுக்கு சிறந்த முறையில் சேவை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா். விழாவில் வங்கிக்கிளை மேலாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் என பலா் பங்கேற்றனா்.