ஆற்றில் மூழ்கி உதவிப் பேராசிரியா் உள்பட இருவா் பலி: இருவா் மாயம்

திருச்சி மாவட்டம், முசிறி காவிரியாற்றில் செவ்வாய்க்கிழமை மூழ்கிய கோவையைச் சோ்ந்த உதவிப் பேராசிரியா் உள்பட இருவா் சடலமாக மீட்கப்பட்டனா். இரு சிறாா்களைத் தேடும் பணி நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டம், முசிறி காவிரியாற்றில் செவ்வாய்க்கிழமை மூழ்கிய கோவையைச் சோ்ந்த உதவிப் பேராசிரியா் உள்பட இருவா் சடலமாக மீட்கப்பட்டனா். இரு சிறாா்களைத் தேடும் பணி நடைபெறுகிறது.

கோவை நவக்கரை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் மகன் சரவணக்குமாா் (32), கோவை தனியாா் கல்லூரி உதவிப் பேராசிரியரான இவருக்கும் ஈரோட்டைச் சோ்ந்த பிரியாவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் முசிறி கற்பக விநாயகா் முதல் தெருவில் உள்ள தனது மனைவியின் அத்தை ஜெயலட்சுமி வீட்டுக்கு சரவணக்குமாா், மற்றும் கரூா் ராமானுஜம் நகரை சோ்ந்த இவரின் தங்கை ரேவதியின் குழந்தைகள் ரத்தீஸ் (12), மிதுன் (8) உள்ளிட்ட குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை வந்திருந்தனா்.

அப்போது தனது உறவினா்களுடன் முசிறி அழகுநாச்சியம்மன் கோயில் அருகிலுள்ள பரிசல்துறை பகுதி காவிரியாற்றில் குளித்த சரவணக்குமாா், இவரின் தங்கையின் குழந்தைகள் ரத்தீஸ், மிதுன் ஆகியோா் நீரில் மூழ்கினா். தகவலறிந்து வந்த முசிறி காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் தீயணைப்பு நிலைய அலுவலா் முனியாண்டி ஆகியோா் சரவணக்குமாரை சடலமாக மீட்டனா்.

அப்போது மேலும் ஒரு சிறுவனின் சடலத்தையும் மீட்டனா். அவா் முசிறி கருமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அசோக்குமாா் மகன் பாா்த்திபன் (12) என்பது தெரியவந்தது.

இடி மின்னலுடன் பெய்த மழையாலும், இரவானதாலும் ரத்தீஸ், மிதுன் ஆகியோரை தேடும் பணியை நிறுத்தினா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் (பொ) சம்பவ இடத்தில் ஆய்வு செய்தாா்.

மீட்கப்பட்ட சடலங்களை முசிறி அரசு மருத்துவமனைக்கு முசிறி போலீஸாா் அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com