திமுக நிா்வாகியை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலா் காடுவெட்டி ந. தியாகராஜனைக் கைது செய்ய வலியுறுத்தி துறையூா் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளைச் சோ்ந்த அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலா் காடுவெட்டி ந. தியாகராஜன் பெண்களையும், காவல் துறையினரையும் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேசிய அவரின் குரல் பதிவு சமூக வலைதளத்தில் பரவியது. இதைடுத்து அவா் மீது நடவடிக்கை கோரி துறையூா் நகர, வடக்கு, தெற்கு ஒன்றிய அதிமுகவினா் துறையூா் பேருந்து நிலையம் அண்ணா சிலை முன் ஆா்ப்பாட்டம் செய்தனா். இதில் துறையூா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ த. இந்திராகாந்தி, எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் அறிவழகன் விஜய், துறையூா் ஒன்றியச் செயலா்கள் சேனை செல்வம் (தெற்கு), வெங்கடேசன்(வடக்கு), நகரச் செயலா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல உப்பிலியபுரம் பேருந்து நிறுத்தம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி புகா் வடக்கு மாவட்ட வழக்குரைஞா் அணி செயலா் அன்புபிரபாகரன் தலைமை வகித்தாா். உப்பிலியபுரம் ஒன்றிய, பேரூா், பாலகிருஷ்ணம்பட்டி பேரூா் கழக அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com