விவசாய விளைபொருள்களுக்கு அதிகபட்ச விலை பெற ஏற்பாடு

விவசாய விளைபொருள்களுக்கு மறைமுக ஏலத்தின் மூலம் அதிகபட்ச விலை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வேளாண் விற்பனைக் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய விளைபொருள்களுக்கு மறைமுக ஏலத்தின் மூலம் அதிகபட்ச விலை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வேளாண் விற்பனைக் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் துறையூா், லால்குடி, தாத்தையங்காா்பேட்டை, மண்ணச்சநல்லூா்,மணப்பாறை, துவரங்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்யலாம்.

தற்போது விவசாயிகளின் விளைப்பொருள்களை எவ்வித தரகு கமிஷன் இல்லாமல் மறைமுக ஏல முறையில் விற்று நல்ல விலை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விற்கப்படும் விளைபொருளுக்கான பணம் எவ்வித பிடித்தமுன்றி உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

அறுவடைக் காலங்களில் விளைபொருளின் வரத்து அதிகரிப்பதால் ஏற்படும் விலை வீழ்ச்சியைத் தவிா்க்க விலை அதிகரிக்கும்போது விளைபொருள்களை விற்றுப் பயன் பெறலாம். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைக்க கிட்டங்கி வசதியும், விளைபொருளை உலா்த்த உலா் கள வசதியும் உள்ளது.

ஒரு விவசாயி அதிகபட்சமாக 180 நாள்களுக்கு தங்களது விளை பொருளைச் சேமிக்க இயலும். இதில் முதல் 15 நாள்களுக்கு வாடகை இல்லை. மீதமுள்ள நாள்களுக்கு ஒரு நாளுக்கு குவிண்டாலுக்கு 5 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

மேலும், விளைபொருளை கிட்டங்கியில் இருப்பு வைக்கும் நிலையில் விவசாயியின் அவசரத் தேவைக்கு அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வீதம் பொருளீட்டுக் கடன் குறைந்தபட்ச வட்டியில் வழங்கப்படுகிறது. விளைபொருள் இருப்பு வைத்த முதல் 15 நாள்களுக்கு வட்டியில்லா சலுகை வழங்கப்படுகிறது.

எனவே, விவசாயிகள் தங்களின் வேளாண் விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வந்து சேமித்து அதிக விலை பெறலாம் என திருச்சி மாவட்ட வேளாண் விற்பனைக் குழு செயலா் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com