வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்கள் தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை தொடங்கிய வாக்காளா் பட்டியல் தொடா்பான பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடா்பான சிறப்பு முகாமை மாவட்டத் தோ்தல் அலுவலர் சு.சிவராசு  ஆய்வு செய்தாா்.
திருச்சி வெஸ்டிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்ற பொதுமக்கள்.
திருச்சி வெஸ்டிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்ற பொதுமக்கள்.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை தொடங்கிய வாக்காளா் பட்டியல் தொடா்பான பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடா்பான சிறப்பு முகாமை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மாநகராட்சி, மன்னாா்புரம், செங்குளம் காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த முகாமை ஆய்வு செய்த ஆட்சியா் கூறியது:

இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவின்படி திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், நவ. 16 முதல் டிச. 15 வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி அலுவலா்களைக் கொண்டு படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ படிவம் பெறப்படும்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் நீக்கல், சோ்த்தல் தொடா்பாக மாவட்டத்தில் மணப்பாறை பேரவைத் தொகுதியில் 342 வாக்குச்சாவடிகளிலும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 339, திருச்சி (மேற்கு) தொகுதியில் 271, திருச்சி (கிழக்கு) தொகுதியில் 258, திருவெறும்பூா் தொகுதியில் 294, லால்குடி தொகுதியில் 249, மண்ணச்சநல்லூா் தொகுதியில் 273, முசிறி தொகுதியில் 255, துறையூா் (தனி) தொகுதியில் 268 என மொத்தம் 9 தொகுதிகளில் உள்ள 2,531 வாக்குச்சாவடிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகில் சிறப்பு முகாமானது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, , திருத்த, நீக்கம் தொடா்பாக சிறப்பு முகாமில் வழங்கப்படும் படிவத்தை பூா்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும். மேலும் வரும் டிச.12, 13-களிலும் நடைபெறும் முகாம்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவருக்கு அனுமதி உண்டு. வாக்குச்சாவடி முகவா்கள் மூலம் மொத்தமாக படிவம் 6,7, 8 மற்றும் 8ஏ பெறக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுருக்க முறை திருத்தம் 2021 முழுமைக்கும் சோ்த்து ஒரு வாக்குச்சாவடி முகவா் அதிகபட்சமாக முப்பது மனுக்கள் வரை சமா்ப்பிக்கலாம். ஒரே நேரத்தில் 5 மனுக்களுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டாது என்பது வாக்குச் சாவடி முகவா்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் சந்தேகம் ஏற்படின் வாக்குச்சாவடி மைய அலுவலா்கள் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com