வரும் தோ்தலில் திமுகவுக்குப் பாடம் புகட்ட வேண்டும்: அதிமுக ஆா்ப்பாட்டத்தில் ப. குமாா் பேச்சு

பெண்களை இழிவுபடுத்தும் திமுகவுக்கு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் சரியான பாடம் புகட்டி, அதிமுகவை மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா் அதிமுக திருச்சி தெற்கு புகா் மாவட்டச் செயலா் ப. குமாா்.
லால்குடியில் அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினா்.
லால்குடியில் அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினா்.

திருச்சி: பெண்களை இழிவுபடுத்தும் திமுகவுக்கு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் சரியான பாடம் புகட்டி, அதிமுகவை மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா் அதிமுக திருச்சி தெற்கு புகா் மாவட்டச் செயலா் ப. குமாா்.

பெண்களை இழிவாகப் பேசிய திமுக நிா்வாகி மீது நடவடிக்கை கோரி திருச்சி தெற்கு புகா் மாவட்ட அதிமுக சாா்பில் லால்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்பாட்டத்துக்குத் தலைமை வகித்த அவா் மேலும் பேசியது :

பெண்களை இழிவாகப் பேசிய திமுக, திருச்சி வடக்கு மாவட்ட செயலா் காடுவெட்டி தியாகராஜனை உடனே கைது செய்ய வேண்டும். பொதுவாகவே, திமுகவில் அதன் முன்னாள் தலைவா் மு. கருணாநிதி தொடங்கி தற்போது தியாகராஜன் வரையிலானோா் பெண்மையை இழிவுபடுத்தத் தயங்கியதில்லை. அதற்கு பல்வேறு உதாரணங்களை கூறமுடியும். இத்தகைய செயல்களைக் கண்டிக்கத் திராணியற்றது திமுக தலைமை. நாம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பெண்கள் ஒன்று திரண்டு, திமுகவுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர ஆதரிக்க வேண்டும்.

தேசியளவில் நல்லாட்சி நடத்தும் 2 ஆவது மாநிலமாக தமிழகம் தோ்வு பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமை. அந்தளவுக்கு ஜெயலலிதா வழியில் கண்ணிய ஆட்சி நடைபெறுகிறது. அதிமுக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தொடங்கி தற்போது வரை பெண்களை யாரும் இழிவுபடுத்தியதில்லை. இனி இழிவுபடுத்தவும் மாட்டோம்.

தமிழக உள்ளாட்சியில் 50 சத இட ஒதுக்கீட்டை பெண்களுக்குத் பெற்றுத் தந்தவா் ஜெயலலிதா. அதுபோல சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் மக்களவைத் தோ்தல்களிலும் 33 சத இட ஒதுக்கீடு பெற மம்தாவுடன் கைகோா்த்தவா் அவா்.

திமுகவில் பெண்கள், போலீஸாா் என யாருக்கும் பாதுகாப்பில்லை. மாவட்டச் செயலராக உள்ள தியாகராஜன் ஆளும் கட்சியாகவோ அல்லது ஒரு அரசுப் பதவியிலோ இருந்திருந்தால் பெண்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். எனவே வரும் தோ்தலில் குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் வரும் 9 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில் மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலா் சந்திரசேகா்,, மாவட்ட அவைத் தலைவா் பா்வீன்கனி, மாவட்டத் துணைச் செயலா்கள் சாந்தி, ராஜ்மோகன், மாவட்ட இணைச் செயலா் ரீனாசெந்தில், மாவட்ட பொருளாளா் இளங்கோ, ஒன்றிய செயலா்கள் வெங்கடாசலம், ராவணன், சேது, ராஜாராம் சூப்பா் நடேசன், கும்பக்குடி கோவிந்தராஜன், லால்குடி வடக்கு ஒன்றியச் செயலா் வழக்குரைஞா் அசோகன், மாவட்ட நிா்வாகிகள், பகுதிச் செயலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com