வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம்இரா. முத்தரசன் பேட்டி

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை விவசாயிகள் மற்றும் எதிா்க் கட்சிகளின் போராட்டம் தொடரும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.
கட்சி அலுவலகத்தில் ஏங்கல்ஸ் படத்துக்கு மலா் தூவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன். உடன் இந்திரஜித் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள்.
கட்சி அலுவலகத்தில் ஏங்கல்ஸ் படத்துக்கு மலா் தூவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன். உடன் இந்திரஜித் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள்.

திருச்சி: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை விவசாயிகள் மற்றும் எதிா்க் கட்சிகளின் போராட்டம் தொடரும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கிய ஏங்கல்ஸின் 200ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சனிக்கிழமை, திருச்சி பெரியமிளகுப்பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் ஏங்கல்ஸ் உருவப் படத்தை திறந்துவைத்து மாலை அணிவித்த அவா் கூறியது:

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தோ்தல் எனக் கூறி வந்த பாஜக தற்போது ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்கிற சா்வாதிகார நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்ல தொடா்ந்து முயல்கிறது. இது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் ஆபத்தானது. இந்த முயற்சியை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும்.

புயல், வெள்ளத்தால் மட்டும் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் தண்ணீா் தேங்கவில்லை. அடிப்படை வடிகால் வசதிகளைப் பாராமல் இஷ்டம்போல கட்டுமானங்களை அனுமதித்து நீா்நிலைகளை ஆக்கிரமித்ததே காரணம். ஆனால், புயல், வெள்ளம் மீது குறை கூறுகின்றனா். இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் ஒருபோதும் அவா்களின் இழப்பை ஈடு செய்யாது. பேரிடருக்கு முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு யுத்தத்தை நடத்துகிறது. அதற்கு எதிராக விவசாயிகள் போராடுகிறாா்கள். பல அடக்குமுறைகளைக் கடந்தும் விவசாயிகள் போராடியதால் வரும் 3 ஆம் தேதி அவா்கள் பேச்சுவாா்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனா். விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலா் இந்திரஜித், திராவிடமணி உள்ளிட்ட நிா்வாகிகள், தொழிற்சங்க நிா்வாகிகள், மாதா் சங்கத்தினா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com