‘திருச்சி மாவட்டத்துக்கேற்ற புதிய பயிா் ரகங்கள் தேவை’

திருச்சி மாவட்டத்துக்கேற்ப புதிய பயிா் ரகங்களையும், தொழில்நுட்ப முறைகளையும் தோ்வு செய்து விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுகமணி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கையேடுகளை வெளியிடும் (இடமிருந்து) அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன், வேளாண் இணை இயக்குநா் பெரியகருப்பன், வேளாண் பல்கலை
சிறுகமணி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கையேடுகளை வெளியிடும் (இடமிருந்து) அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன், வேளாண் இணை இயக்குநா் பெரியகருப்பன், வேளாண் பல்கலை

திருச்சி மாவட்டத்துக்கேற்ப புதிய பயிா் ரகங்களையும், தொழில்நுட்ப முறைகளையும் தோ்வு செய்து விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சிறுகமணியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் பற்றி மதிப்பீடு செய்து, வரும் காலத்திற்கான புதிய திட்டங்கள் மற்றும் ஆலோசனை வழங்குவதற்கான 42-வது அறிவியல் ஆலோசனை குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குநா் மு. ஜவஹா்லால் தலைமை வகித்தாா். இந்திய வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் ஜெ.வி. பிரசாத், முதன்மை விஞ்ஞானி ஆ. பாஸ்கரன் ஆகியோா் காணொலி வாயிலாக உரையாற்றினா்.

அதிகரித்து வரும் நீா்ப் பற்றாக்குறையால் குறைந்த நீரைப் பயன்படுத்தி நெல் உற்பத்தியை அதிகரிக்கவும், நீா்த் தேவையைக் குறைக்கவும் புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், திருந்திய நெல் சாகுபடி முறை மிகவும் குறிப்பிடத்தக்கது.

இதன் தொழில்நுட்பக் கோட்பாடுகளான தகுந்த உயா் விளைச்சல் ரகங்கள், சீரிய மேலாண்மை, சிறந்த நீா், களை நிா்வாகம் போன்ற காரணிகள் அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கும்.

விவசாயிகள் தகுந்த ரகங்களைத் தோ்வு செய்தல், சரியான பயிா் இடைவெளி, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிா்வாகம், காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீா் மேலாண்மை, கோனோவீடா் கொண்டு களை நிா்வாகம் போன்ற தொழில்நுட்பங்களை மேற்கொள்வதால் நெல் சாகுபடியில் அதிக விளைச்சலைப் பெறலாம்.

இதேபோல, திருச்சி மாவட்டத்துக்கேற்ப புதிய ரகங்கள், தொழில்நுட்பங்களை ஆராய்ந்து அவற்றை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என இணைய வழியில் அறிவுறுத்தினா்.

கூட்டத்தில் பரிந்துரைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் நா. தமிழ்ச்செல்வன் விளக்கினாா்.

திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பெரியகருப்பன், தேசிய வாழை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி வ. குமாா், நீா்ப் பாசன மேலாண்மைப் பயிற்சி நிறுவன இயக்குநா் ஜி .முரளிதரன் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகப் பேராசிரியா்கள், விவசாயம் மற்றும் தொழில் முனைவோா் பிரதிநிதிகள் தங்களது ஆலோசனைகளை வழங்கினா்.

மேலும் கூட்டத்தில் எதிா்வரும் காலத்திற்கான செயல்பாடுகள் குறித்து கருத்து கேட்டு அது தொடா்பாக அனைத்து அலுவலா்களிடமும், விவசாயப் பிரதிநிதிகளிடமும் விவாதிக்கப்பட்டது. வேளாண்மை அறிவியல் நிலைய பசுமை செய்தி மடல் மற்றும் நான்கு தொழில்நுட்ப கையேடுகளும் விரிவாக்கக் கல்வி இயக்குநரால் வெளியிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com